கரூரில்,காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை திறன்மிகு உதவியாளர்கள் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
கரூரில்,காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை திறன்மிகு உதவியாளர்கள் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
கரூரில்,காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை திறன்மிகு உதவியாளர்கள் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்டரங்கில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை திறன்மிகு உதவியாளர்கள் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோட்ட தலைவர் முத்துசாமி, மாநில நிர்வாகிகள், மகளிர் குழு உறுப்பினர்கள், மண்டல செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சங்க பொது செயலாளர் குருசாமி வேலை அறிக்கை தாக்கல் செய்தார். மாநில பொருளாளர் சாலமன் வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார். கூட்டத்தில் கௌரவ பொதுச் செயலாளர் மாரிமுத்து நிறைவுரை ஆற்றினார். நிகழ்ச்சியின் நிறைவில் நெடுஞ்சாலைத் துறையில் திறன்மிகு உதவியாளர்கள் நிலை இரண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி வருகிற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி சென்னையில் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.