பவானிசாகர் பூங்கா அருகே ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டவர் பிணமாக மீட்பு

பவானிசாகர் பூங்கா அருகே ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டவர் பிணமாக மீட்பு

Update: 2025-01-01 03:20 GMT
பவானிசாகர் பூங்கா அருகே ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டவர் பிணமாக மீட்பு கோவை மாவட்டம் பேரூர் செட்டிபாளையம் பெருமாள் வீதியை சேர்ந்தவர் அபுதாகிர் (வயது 40). இவர் கடந்த 29-ந் தேதி நண்பர்கள் 3 பேருடன் பவானிசாகர் பூங்காவுக்கு வந்தார். பின்னர் அவர் அங்குள்ள பவானி ஆற்றில் இறங்கி குளித்தார். இதில் அவர் ஆற்று நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அபுதாகிரை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள வட்டப்பாறை என்ற இடத்தின் அருகே ஆற்றில் அபுதாகிர் பிணமாக மிதந்தார். இதைத்தொ ஏ டர்ந்து அபுதாகிரின் உடலை பவானிசாகர் போலீசார் கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் - வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News