படகில் மயங்கி விழுந்த மீனவர் உயிரிழப்பு

மணவாளக்குறிச்சி

Update: 2025-01-01 03:19 GMT
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி  அருகே கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் சகாய விஜி (40)மீன்பிடி தொழிலாளி. நேற்று முன்தினம்  மாலை அமல ஜோஸ்  என்பவருக்கு சொந்தமான படகில் சகாய விஜி, அமல ஜோஸ் மற்றும் இரண்டு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று நான்கு பேரும் மீன் பிடித்து விட்டு கடலில் இருந்து கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.        அப்போது படகில் இருந்த சகாய விஜதி டீரென மயங்கி விழுந்தார். சக மீனவர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சகாய விஜி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.       இது குறித்து அமல ஜோஸ் குளச்சல் மரைன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  உயிரிழந்த சகாய  விஜிக்கு சகாய ஆரோக்கிய தனிஷா என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகனும் உள்ளனர்.

Similar News