புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவியேற்பு.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கருண் கரட் பதவி ஏற்றுக்கொண்டார்.
தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய காவல் கண்காணிப்பாளர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்ற அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த காவல் கண்காணிப்பாளர் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது திருவாரூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக கருண் கரட் இன்று திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்டார்.