பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம்.

துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்பு.

Update: 2025-01-05 17:03 GMT
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள், இலங்கைத் தமிழா் குடும்ப மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழு கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கும் பணி தொடங்கியது. திருவண்ணாமலை, வேங்கிக்கால் புதூரில் பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்களை வீடு, வீடாகச் சென்று விநியோகம் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தாா்.

Similar News