ஒரே இரவில் எப்படி-நெல்லை முபாரக் கேள்வி
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்
எதிர்க்கட்சிகள், விவசாயிகள் நடத்தும் போராட்டங்களுக்கு போக்குவரத்து நெரிசல் சட்ட ஒழுங்கு பிரச்சனை என அனுமதி மறுக்கும் காவல்துறை ஒரே இரவில் திமுகவின் போராட்டங்களுக்கு மேடை அமைத்து போராட்டம் நடத்த அனுமதி அளித்தது எப்படி என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று அறிக்கை மூலம் கேள்வி எழுப்பியுள்ளார். காவல்துறையின் இத்தகைய பாரபட்சம் கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார்.