புதிய மாநகர ஆணையாளருடன் எஸ்டிபிஐ கட்சியினர் சந்திப்பு
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியினர்
நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளராக சந்தோஷ் கதிமானி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை இன்று (ஜனவரி 8) மரியாதை நிமித்தமாக எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் ஷாகுல் ஹமீது உஸ்மானி,மாவட்ட பொதுச்செயலாளர் ஆரிப் பாஷா, மாவட்ட துணை தலைவர் ஹயாத் முஹம்மது, மாவட்ட செயலாளர் அன்வர் ஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிட்டி ஷேக் ஆகியோர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.