நெல்லை மாநகர பேட்டை பகுதியில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது.பேட்டை பகுதியில் இருந்து சுமார் 500 முதல் 1000 மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஆனால் காலை நேரத்தில் போதிய பேருந்து வசதி இல்லாததால் இவ்வாறு படிக்கட்டுகளில் தொங்கி செல்கின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.