வாரச்சந்தை குத்தகை பொது ஏலம் ஒத்திவைப்பு,வியாபாரிகள் மகிழ்ச்சி

வாரச்சந்தை குத்தகை பொது ஏலம் ஒத்திவைப்பு,வியாபாரிகள் மகிழ்ச்சி

Update: 2025-01-08 11:29 GMT
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் இயங்கும் கால்நடைச்சந்தை மற்றும் காய்கறி வாரச்சந்தை நூற்றாண்டுகால புகழ்பெற்றதாகும். விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடை மற்றும் காய்கறி சந்தையை இந்து சமய அறநிலையத் துறை சார்பில் குத்தகை பொது ஏலம் விட நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் சந்தைப் பகுதியில் உள்ள புதர்களையும் குப்பைமேட்டையும் அகற்றிடவும் நிலப்பரப்பை சமப்படுத்தவும் விற்பனை இடங்கள் கூரை அமைத்து மின் விளக்கு வசதிகளையும் பொது கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த பிறகு குத்தகை ஏலம் விட வேண்டும் என்று பலரும் கோரிக்கைவிடுத்தனர். இந்நிலையில் அச்சிறுப்பாக்கம் வாரச்சந்தை குத்தகை பொது ஏலம் விட நடவடிக்கை எடுத்த போது அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த பிறகு ஏலம் விட வேண்டும் இப்போது உள்ள நிலையில் அப்படியே ஏலம் விட ஏலம் கேட்போர் ஆட்சேபனை தெரிவித்ததால் அச்சிறுப்பாக்கம் வாரச்சந்தை குத்தகை பொது ஏலம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே அப்பகுதி பொதுமக்கள் சிறு குறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Similar News