நூதனமாக பெண்ணிடம் நகை திருடிய இருவர் கைது

காரிமங்கலம் அருகே நூதனமாக பெண்ணிடம் நகை திருடிய இருவர் கைது காவலர்கள் விசாரணை

Update: 2025-01-08 11:10 GMT
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் அருகே உள்ள பெரியமிட்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த பெருமா என்பவரின் வீட்டுக்கு நேற்று முன்தினம் இருவர் மலிவான விலையில் தங்க நகைகளுக்கு பாலிஷ் போட்டு தருவதாக பெருமாவிடம் கூறினர்.பின் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.இதனால் அவர் வீட்டுக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்து அந்த நபர்களிடம் கொடுத்துள்ளார். அப்போது அவர்கள் பெருமா கை மீது ஏதோ தடவி உள்ளனர். இதனால் அவர் மயங்கினார் இதையடுத்து சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து கண் பெருமா அணிந்திருந்த தங்கத்தோடு, மூக்குத்தி, வெள்ளி கொலுசு ஆகியவற்றை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அப்போது அந்த நபர்கள் நகையை அபேஸ் செய்து சென்றது தெரியவந்தது. இது குறித்து பெருமா காரிமங்கலம் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார் அதன்பேரில் காவலர்கள் விசாரணை நடத்தினர். இன்று ஜனவரி 08, பெரியமிட்டஅள்ளி பகுதியில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து காவலர்கள் விசாரணை நடத்தினர். அதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ராஜ், காவேரிப்பட்டணத்தை சேர்ந்த சின்னசாமி என்பதும், இவர்கள் பெருமாவிடம் நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் காவலர்கள் கைது செய்தனர்.

Similar News