குமரி: கடன் தொல்லையால் தாய் மகன் தற்கொலை

தக்கலை

Update: 2025-01-07 10:02 GMT
குமரி மாவட்டம் தக்கலை அருகே பறைக்கோடு பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் மனைவி அமுத கலா (50).  இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஆண் பிள்ளைகள் உள்ளனர்.  மகன் மெல்பின் ராஜ் (23).  சகோதரியை திருமணம் செய்து கொடுக்க மெல்பின் ராஜ் வங்கியில் கடன் வாங்கியுள்ளார். அந்த வங்கி கடனை செலுத்தி வந்துள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் புதிய வீடு கட்டியுள்ளார்கள். அந்த வீடு கட்டுவதற்கும் வங்கியில் இருந்து மீண்டும் கடன் பெற்றுள்ளனர். இதனால் வங்கியில் கடன் தொகை ரூபாய் 20 லட்சமாக உயர்ந்தது. இது ஒழுங்காக தவணை அடக்க வேண்டிய வருமானம் அவர்களுக்கு இல்லாமல் தடுமாறினர இதனால் மெல்வின் ராஜ் குடும்பத்தினர் சமீபகாலமாக மிகவும் வருத்தத்தில் இருந்து இருந்தனர். ஆசை ஆசையாக கட்டிய வீடை விற்று கடன் அடைக்க முடிவு செய்தபோது ஆசையாக கட்டி வீடை கட்டவும் அவர்களுக்கு மனம் இல்லாமல் அவதிப்பட்டனர்.     இந்த நிலையில் தாய் அமுத கலா மகன் மெல்பின் ராஜ் ஆகியோர் நேற்று இரவில் விஷம் குடித்து தற்கொலை செய்தனர். இன்று காலை இதனை கண்ட தங்கராஜ் தக்கலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News