பருவமழையால் சேதமடைந்த சம்பா நெற்பயிர்களை

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு

Update: 2025-01-08 10:47 GMT
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சியில், அண்மையில் பெய்த பருவமழையால் சேதமடைந்த சம்பா சாகுபடி நெற்பயிர்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனருமான அண்ணாதுரை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ஒன்றிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த சாகுபடி பரப்புகளையும் கணக்கீடு செய்து அரசுக்கு அனுப்பும்படி வருவாய் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க பரிந்துரை செய்வதாகவும் கூறினார். ஆய்வின் போது, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கண்ணன், வேளாண்மை துணை இயக்குனர் தேவேந்திரன், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்கலா, வேளாண்மை அலுவலர் சாகித்யா, வேளாண்மை உதவி அலுவலர்கள் பவித்ரா, பழனி மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Similar News