பொங்கல் போனஸ் கேட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சார்பில் பொங்கல் போனஸ் கேட்டு போராட்டம்
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதில், தமிழ்நாட்டில் 12,525 கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் பணி பதிவேடு உள்ள 40 ஆண்டுகள் பணி புரிந்த டேங்க் ஆப்ரேட்டர்கள் தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கிராம ஊராட்சியில் ரூ.250 ஊதியத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் டேங்க் ஆப்ரேட்டர்களுக்கு பணிவரம்பு முறையான வேண்டும் தூய்மை பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டியும்,10 ஆண்டு பணிமுடித்த தூய்மை பணியாளர்களுக்கு காலம் முறை வேண்டும். பணியாளர்களே இயக்குனர் அலுவலகத்தில் தமிழக ஆற்றின் சார்பில் TNGOTS அமைப்பின் மாநில நிர்வாகிகளிடம், ஊரக வளர்ச்சித் துறை உயர் அலுவலர்கள், நடத்திய பேச்சுவார்த்தையில் பணி நிரந்தரம் வேண்டும். 3 மாதம் கடந்தும், அறிவிப்பு வெளியிடாமல் காலம் தாழ்த்துவது அதிர்ச்சியாக உள்ளது. தூய்மை காவலர்களுக்கு 5000 பொங்கல் போனஸ், வழங்க வேண்டி தமிழக அரசின் கவன ஈர்ப்பு முழக்கம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வைத்தார் மாநில பொதுச் செயலாளர் விஜயன். மாநில மகாராணி செயலாளர் மகேஸ்வரி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்