கோவை: போலி பங்குச்சந்தை - ரூ.31 லட்சம் மோசடி !
தங்க வியாபாரி வாட்ஸ்அப் குழுவில் பரவிய மோசடி தகவலின் பேரில் ரூ.31 லட்சத்தை இழந்துள்ளார்.
தங்க வியாபாரியான தனபதி (47) என்பவர், வாட்ஸ்அப் குழுவில் பரவிய மோசடி தகவலின் பேரில் ரூ.31 லட்சத்தை இழந்துள்ளார்.தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த தனபதி, கேடலிஸ்ட் மார்க்கெட் லிமிடெட் என்ற வாட்ஸ்அப் குழுவில் இணைக்கப்பட்டார்.அக்குழுவில், நிறுவனத்தில் முதலீடு செய்து அதிக லாபம் கிடைத்ததாக உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர். இதனால் ஈர்க்கப்பட்ட தனபதி, குழுவில் இருந்த ஒருவரின் அறிவுரையின் பேரில் போலியான செயலியை பதிவிறக்கம் செய்து, 13 தவணைகளில் ரூ.31 லட்சத்தை முதலீடு செய்தார். ஆனால், பணத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. இதுகுறித்து புகார் அளித்ததையடுத்து, போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.