தரமற்ற புதிய தார்ச்சாலை, பொதுமக்கள் அதிர்ச்சி

தரமற்ற புதிய தார்ச்சாலை, பொதுமக்கள் அதிர்ச்சி

Update: 2025-01-09 05:10 GMT
அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டது, ஊனமலை ஊராட்சி.இங்கு, சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, ஊனமலை வழியாக முனியந்தாங்கல் வரை செல்லும் பிரதான சாலை உள்ளது.இந்த சாலையை 10-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். ஜல்லி கற்கள் பெயர்ந்து, மிகவும் மோசமான நிலையில் இந்த சாலை இருந்தது. இந்நிலையில், பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 68.16 லட்சம் ரூபாய் மதிப்பில், சமீபத்தில் இது தார்ச்சாலையாக அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், தரமற்ற நிலையில் இந்த சாலை உள்ளதால், பகுதிவாசிகள் அதிர்ச்சியில் உள்ளனர். குறிப்பாக, மண்ணின் மேல் தார் கலவையை பரப்பியது போல், இந்த சாலை உள்ளது. கைகளில் பெயர்த்து எடுக்கும் அளவுக்கு இச்சாலை உள்ளதால், இரண்டு அல்லது மூன்று மாதங்களில் சேதமடைந்து விடும் எனக் கூறப்படுகிறது. எனவே, கலெக்டர் மற்றும் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Similar News