குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே ஆனையடி பகுதியை சேர்ந்தவர் லில்லி ஷோபா (45). இவரது மகள் மார்த்தாண்டத்தில் ஒரு கோச்சிங் சென்டரில் படித்து வருகிறார். இன்று 7-ம் தேதி காலை அவர் தனது தாயார் லில்லி ஷோபாவை பைக்கில் ஏற்றிக்கொண்டு ஆனையடியில் இருந்து பூவன்கோடு வழியாக சென்று கொண்டிருந்தார். லில்லி ஷோபா பைக்கின் பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது எதிரே காலியாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் லில்லி ஷோபா சென்ற பைக் மீது மோதித் தள்ளியது. இதில் பைக் தூக்கி வீசப்பட்டு பின்னால் இருந்த லில்லி ஷோபா லாரியின் சக்கரத்தில் சிக்கியதால் உடல் நசங்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த லில்லி ஷோபாவின் உடலை மீட்டு சென்றனர். திருவட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.