நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2025-01-07 10:20 GMT
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், பிள்ளையார்நத்தம் ஊராட்சி, பனையூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.7.44 இலட்சம் மதிப்பில் புதிய குளம் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், பனையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளியின் அடிப்படை வசதிகள், பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதம், இடைநிற்றல் உள்ளிட்டவை குறித்து தொடர்புடைய தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் கலந்துரையாடினார். மேலும், சேதுபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.28 இலட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டப்பட்டு வருவதையும், பின்னர், நத்தகுளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 9.45 இலட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக்கடை கட்டப்பட்டுள்ளதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.42.65 இலட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, நத்தகுளம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, குழந்தைகளின் எண்ணிக்கை, வயதிற்கேற்ற எடை மற்றும் உயரம், வழங்கப்படும் ஊட்டசத்து உணவுகள் குறித்து கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து, ஆதித்தனேந்தல் கிராமத்தில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் ரூ.6.75 இலட்சம் மதிப்பில் பனித்துளிக்கூடம் அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் உருவாக்கப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார். இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Similar News