அரசு போட்டிதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா..

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள தென்பரை எனும் குக்கிராமத்தில் தென்பரை இலவச பயிற்சி மையம் என்ற அமைப்பு சார்பில் அரசு போட்டிதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா.

Update: 2025-01-05 18:03 GMT
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள தென்பரை எனும் குக்கிராமத்தில் தென்பரை இலவச பயிற்சி மையம் என்ற அமைப்பு ஒன்று சிறந்த கல்வியாளர்களை கொண்டு தென்பரை கிராமம் மட்டுமன்றி சுற்று வட்டார பகுதி மாணவ மாணவியர்களையும் இணைத்துக்கொண்டு அரசு போட்டி தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் பயிற்சி வகுப்புகளை அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் நடத்தி வருகிறது. இத்தகைய பயிற்சி வகுப்பானது பள்ளி விடுமுறை நாட்களிலும், கோடை விடுமுறை காலத்தில் தொடர்ச்சியாகவும் காலை 10 மணி முதல் மதியம் 5 மணி வரை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கிராமப்புற மாணவ மாணவியர்களுக்காக தொடங்கப்பட்ட இப்பயிற்சி வகுப்பில் தற்போது திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் சேர்ந்து அரசு போட்டித் தேர்வுக்கான பயிற்சியினை பெற்று வருகின்றனர்.

Similar News