பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடு கட்ட வழங்கப்பட்ட ஆணையில் பயனாளிக்கு வழங்க வேண்டிய 50 சிமெண்ட் மூட்டைகளை வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடிப்பதாக புகார்*

பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடு கட்ட வழங்கப்பட்ட ஆணையில் பயனாளிக்கு வழங்க வேண்டிய 50 சிமெண்ட் மூட்டைகளை வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடிப்பதாக புகார்*

Update: 2025-01-07 09:52 GMT
காரியாபட்டி அருகே கல்குறிச்சி கிராமத்தில் பாரதி நகர் பகுதியில், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடு கட்ட வழங்கப்பட்ட ஆணையில் பயனாளிக்கு வழங்க வேண்டிய 50 சிமெண்ட் மூட்டைகளை வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடிப்பதாக புகார் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்குறிச்சி பாரதி நகரைச் சேர்ந்தவர் வெள்ளைகுட்டி. விவசாயம் செய்து வரும் வெள்ளைகுட்டி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடு கட்ட விண்ணப்பித்திருந்தார். அதற்கான ஆணையும் அவருக்கு வழங்கப்பட்டது. இந்த பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கு மானியத்துடன் 50 மூடை சிமெண்ட் மூட்டைகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் விவசாயி வெள்ளை குட்டிக்கு ஆணை வழங்கப்பட்ட நாளிலிருந்து தற்போது வரை 50 சிமெண்ட் மூட்டைகள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் 50 சிமெண்ட் மூட்டைகளை கேட்டு பல மாதங்களாக விவசாயி வெள்ளைக்குட்டி காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அலைந்தும் அதிகாரிகள் முறையாக எந்தவித சரியான பதிலும் அளிக்காமல் இருந்ததால் கூடுதலாக வட்டிக்கு கடன் வாங்கி வெள்ளை குட்டி வீடு கட்டி முடித்துள்ளார். மேலும் இன்னும் வீட்டில் சில பணிகள் இருப்பதால் தொடர்ந்து சிமெண்ட் மூட்டைகள் வழங்கக் கோரி காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தினந்தோறும் அலைந்து திரிந்து வருகிறார் விவசாயி வெள்ளை குட்டி. இது குறித்து விவசாயி வெள்ளை குட்டி கூறுகையில், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடு கட்ட விண்ணப்பித்து தற்போது வரை 50 சிமெண்ட் மூட்டைகள் எனக்கு கிடைக்கவில்லை, கடன் வாங்கி வீட்டை கட்டி முடித்துள்ளேன். 50 மூட்டைகள் சிமெண்ட் வழங்க வேண்டும் ஆனால் தற்போது வரை வழங்கவில்லை. வட்டிக்கு கடன் வாங்கி தான் அத்தனை செலவும் செய்துள்ளேன். ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தனக்கு கிடைக்க வேண்டிய 50 சிமெண்ட் மூட்டைகளை பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பேட்டி : வெள்ளைக்குட்டி (கல்குறிச்சி - பாரதி நகர்)

Similar News