பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கல்வி விடுதி பணியாளர்கள் நல சங்கம் சார்பில் மாநில மாநாடு..
திருவாரூர் தனியார் அரங்கில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கல்வி விடுதி பணியாளர்கள் நல சங்கம் சார்பில் மாநில மாநாடு கௌரவ தலைவர் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது.
திருவாரூர் தனியார் அரங்கில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கல்வி விடுதி பணியாளர்கள் நல சங்கம் சார்பில் மாநில மாநாடு கௌரவ தலைவர் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விழுதுகளில் காலியாக உள்ள சமையலர், காப்பாளர் காப்பாளினிகள் பணியிடத்தை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் மாநிலத் தலைவர் கஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.