தமிழக முதல்வருக்கு ஊராட்சி மன்ற பொட்டிபுரம் தலைவர் செல்வராஜ் மேலும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் நீட்டிப்பு செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனக் கோரிக்கை

கொரோனா காலகட்டத்தில் இரண்டு ஆண்டுகள் பணி செய்ய முடியாததால் கால நீட்டிப்பு செய்ய வேண்டுமென வலியுறுத்தல்

Update: 2025-01-05 17:30 GMT
போடி ஜன 05 தமிழகத்தில் ஊராட்சிமன்ற தலைவர்கள் 1399 பேரின் பதவிகள் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் பதவி நீட்டிப்பு செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என தமிழக முதல்வருக்கு ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திங்கு உட்பட்ட பொட்டிப்புரம் கிராம ஊராட்சி மன்றத்தலைவராக இருந்த செல்வராஜ், கடந்த 2019ஆம் ஆண்டு ஊராட்சிமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கொரோனா காலகட்டங்களில் பொதுமக்களின் பாதுகாப்பு நோய்தடுப்பு நடவடிக்கைகளில் மட்டும் கவனம் செலுத்தப்பட்ட நிலையில், மூன்றாண்டுகள் மட்டுமே மக்கள் நலத்திட்ட பணிகளில் ஈடுபட முடிந்தது. எனவே மேலும் உள்ள மக்கள் பணிகளை முடிக்கும் வகையில் ஊராட்சிமன்ற தலைவர்களின் பதவி காலத்தை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பு செய்வதற்கான தீர்மானத்தை நாளை நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தில் மக்கள் நலன்கருதி தமிழக முதல்வர் அவர்கள் நீட்டிப்பு செய்வதற்கான தீர்மானம் கொண்டு வந்தால் ஒட்டுமொத்த கிராம பகுதிகளும் மேம்பாடு அடைவதோடு, வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை தமிழக முதல்வர் எதிர் கொண்டு மீண்டும் முதல்வராகும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பணியாற்றுவோம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

ஒருவர் பலி