திருவாரூரில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேச்சு.

தமிழக முதல்வரின் புதுமை திட்டங்களால் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை பள்ளி கல்லூரி, விடுதிகளில் அதிகரித்துள்ளது. திருவாரூரில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேச்சு.

Update: 2025-01-05 18:09 GMT
திருவாரூர் தனியார் அரங்கில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கல்வி விடுதி பணியாளர்கள் நல சங்கம் சார்பில் மாநில மாநாடு கௌரவ தலைவர் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விழுதுகளில் காலியாக உள்ள சமையலர், காப்பாளர் காப்பாளினிகள் பணியிடத்தை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று பேசிய போது தெரிவித்ததாவது.... விடுதி சமையலர், காப்பாளர் காலிப்பணிடங்களை  நிரப்புதல் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இன்று ம் தேதி தூத்துக்குடியில் நடக்கும் விழாவில் 116 பேருக்கு சமையலர் பணி ஆணை வழங்கபடுகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் முதல்வர், துணை முதல்வர் கவனத்துக்கு பழகொண்டு சென்று நிரப்பபடும். தூய்மைப்பணியாளர்கள் காலிப்பணியடங்களை நிரப்பும் நடவடிக்கையிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் அந்த பபணியும் நிறைவடையும். பத்தாண்டுகளாக உயர்த்தபடாமலிருந்த விடுதி உணவு கட்டணத்தை முதல்வர் உயர்த்தி கொடுத்துள்ளார். ஆயிரத்து 300 விடுதிகளிலும் ரூ.10 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் சிசிடிவி காமிரா பொருத்தப்படும். ரூ.ஒரு கோடியே 39 லட்சத்துக்கு விடுதி பயனுக்கான பாத்திரங்கள் வாங்கப்பட உள்ளது. ரூ ஒரு கோடியே 50 லட்சத்தில் எல்இடி டிவி விடுதிகளுக்கு வாங்கப்பட உள்ளது. மோசமான நிலையில் உள்ள விடுதிகள், படிக்க  வசதியில்லாத நிலையில் உள்ளது. அவற்றை சீரமைக்க ரூ.30 கோடிக்கு திட்டமிட்டு முதல் கட்டமாக ரூ.10 கோடியில்  விடுதிகளை சீரமைக்க நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மேலும் ஒரு 20 கோடி இரண்டொரு மாதத்தில் ஒதுக்கித்தருவதாக முதல்வர் அறிவித்துள்ளார். விடுதிகளில் தரமான உணவு வழங்கப்பட வேண்டும். அது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். உணவின் தரம் எப்படியிருக்கிறது என மாணவர்களிம் கேட்டு செயல்படுத்துங்கள் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விடுதி மாணவ மாணவிகள் தாய் தந்தையாக சமையலர்களை, அலுவலர்களை  நினைத்துக்கொண்டுள்ளனர். அதன்படி அனைவரும் செயல்பட வேண்டும்.  முதல்வரின் புதுமை திட்டங்களால் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை பள்ளி கல்லூரி, விடுதிகளில் அதிகரித்துள்ளது.  இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் மாநிலத் தலைவர் கஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Similar News