பிரேமலதா விஜயகாந்த் அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம்.
உடன் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு.
தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று திருவண்ணாமலைக்கு வருகை புரிந்தார். முன்னதாக அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். சம்பந்த விநாயகர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதி உள்ளிட்ட பல்வேறு சந்ததிகளில் வழிபாடு செய்த அவருக்கு அண்ணாமலையார் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது.