பேரூர்: கோயில் பாதையில் 10 அடி நீள மலைப்பாம்பு!

ஐயாசாமி கோயிலுக்கு செல்லும் வழியில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தென்பட்டுள்ளது.

Update: 2025-01-07 09:26 GMT
கோவை,பேரூர் தீத்திபாளையம் அருகேயுள்ள கரடிமடை ஐயாசாமி கோயிலுக்கு செல்லும் வழியில் நேற்று இரவு 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது. இதனை கண்ட விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து மதுக்கரை வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் பாம்பை பாதுகாப்பாக பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். கோயிலுக்கு அருகே வனப்பகுதி இருப்பதால் அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Similar News