ஒருவர் பலி

இருசக்கர வாகன விபத்தில் வாலிபர் பலி

Update: 2025-01-07 09:27 GMT
ஈரோடு கஸ்பாபேட்டையை சேர்ந்த முருகேசன் மகன் விஜய் (29). கூலித்தொழிலாளியான அவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த 4ம் தேதி, ஈரோடு ஈ.வி.என். சாலை பெஸ்ட் மருத்துவமனை முன்புறமுள்ள சாலையை, தனது இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்றார்.  அப்போது, எதிரே நடந்து சாலையை கடக்க வந்த நத்தகாடையூர் பழைய கோட்டையை சேர்ந்த வயதான சுப்பிரமணி (65) பர்வதம்( 60) தம்பதியினர் மீது மோதினார்.இதில், சுப்பிரமணிக்கு லேசான சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. பர்வதத்துக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.இவ்விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த விஜயின் தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதனையடுத்து, ஈரோடு ஜி.ஹெச் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News