உடுமலையில் அஸ்திவாரம் என்ற மூன்று நாள் கட்டுமான பொருள் கண்காட்சி
பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர சாமி துவக்கி வைத்தார்
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கம் ,உடுமலை தமிழிசை சங்கமும் இணைந்து அஸ்திவாரம் என்ற பெயரில் உடுமலை தேஜஸ் திருமண மண்டபத்தில் மாபெரும் கட்டுமான பொருட்கள் கண்காட்சி இன்று தொடங்கியது. நிகழ்விற்கு அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்க மாநிலத் தலைவர் பழனிவேல் ராஜன் தலைமை வகித்தார். பொள்ளாச்சி ஈஸ்வரசாமி எம்.பி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.கோல்டன் அரங்கத்தை அப்புகுட்டி தொடங்கி வைத்தார். பிளாட்டினம் அரங்கத்தை ஆர். கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.கே.ராமசாமி தொடங்கி வைத்தார் ஏ அரங்கத்தை உடுமலை தொழில் வர்த்தக சங்கத் தலைவர் அருண் கார்த்திக், உடுமலை நகர மன்ற தலைவர் மத்தீன் தொடங்கி வைத்தனர். பி அரங்கத்தை அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்க மாநில பொருளாளர் பரமேஸ்வரன் தொடங்கி வைத்தார்.அதன் தொடர்ச்சியாக இரவு 7 மணி அளவில் விஜய் டிவி புகழ் நீயா? நானா ?கோபிநாத் வழங்கிய சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கட்டுமான பொருட்களை பார்வையிட்டதுடன் கலை நிகழ்ச்சியையும் பார்த்து ரசித்தினர். இந்த நிகழ்வின் போது அகில இந்திய கட்டுநர் வல்லுனர் சங்க தலைவர் பாலமுருகன், துணைத்தலைவர் கணேசன், செயலாளர் ரவிசங்கர், பொருளாளர் அருண்குமார், அஸ்திவாரம் ஒருங்கிணைப்பாளர் குமரவேல், உடுமலை தமிழிசை சங்க தலைவர் ரவீந்திரன் கெங்குசாமி, செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் ஜெயப்பிரகாஷ், கௌரவ ஆலோசகர் யூ.எஸ்.எஸ்.ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.