சிவன்மலை ஊராட்சியில் பணியாளர்களுக்கு பாராட்டு விழா
சிவன்மலை ஊராட்சியில் பணியாளர்களுக்கு பாராட்டு விழா தலைவர் துணைத் தலைவர் முன்னிலையில் நடைபெற்றது
காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவன்மலை ஊராட்சியில் பணி நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஊராட்சியில் பொதுமக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கியது. சிறந்த நிர்வாகம் ஆகியவற்றை வழங்கியதற்காக தலைவர் துரைசாமி, துணைதலைவர் சண்முகம் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், பஞ்சாயத்து பணியாளர்கள், மின்மோட்டார் பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.