சங்கரமலைப்பட்டி மலை உச்சியில் திருடு போன கோபுர கலசத்தை கோவிலின் அருகே வீசி சென்ற மர்ம நபர்கள்
கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி இரவு திருடு போன கலசம் இன்று மர்ம நபர்களால் கோவில் அருகே வீசி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது;
கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, சங்கர மலைப்பட்டி மலை உச்சியில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சங்கரேஸ்வரர் கோவில் கலசத்தை திருடி சென்றவர்கள் கோயில் அருகே இன்று கலசத்தை வீசி சென்றதால் பரபரப்பு. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சங்கரமலைப்பட்டியில் மலை உச்சியில் அமைந்துள்ள சௌந்தரநாயகி சங்கரேஸ்வரர் கோவில், சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் அமைந்துள்ளது. இதில் 200 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மலை உச்சியில் அமைந்துள்ள கோவில் பழமையான கோபுரத்தில் உள்ள விலை உயர்ந்த கலசம் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி இரவு திருடப்பட்டுள்ளது இதுகுறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை கோவிலின் அருகே கலசத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் மீண்டும் கலசத்தை அதனை கோவில் அருகே போட்டு சென்றுள்ளனர் விலை உயர்ந்த கலசத்தில் உள்ள இருடியம் போன்ற விலை உயர்ந்த பொருளை எடுத்துக்கொண்டு கலசத்தை மட்டும் திருடர்கள் வீசி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.