கோவை: மேட்டுப்பாளையம்-ஊட்டி பொங்கல் சிறப்பு ரயில் !

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

Update: 2025-01-01 03:31 GMT
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் இது குறித்து வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில்,ஜனவரி 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும்.மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடையும். ஜனவரி 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் காலை 11.25 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்படும்.மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்தடையும்.ஜனவரி 16, 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் காலை 8.20 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்படும்.காலை 9.40 மணிக்கு ஊட்டியை சென்றடையும்.மாலை 4.45 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்படும். மாலை 5.55 மணிக்கு குன்னூரை சென்றடையும்.பொங்கல் பண்டிகை காலத்தில் ஊட்டிக்கு செல்ல திட்டமிடுபவர்கள் இந்த சிறப்பு ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். முன்பதிவு தொடர்பான விவரங்களுக்கு அருகில் உள்ள ரயில் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News