கரூரில் மின்சாரத்துறை தனியார் மயமாக்களுக்கு எதிராக சிஐடியு ஆர்ப்பாட்டம்.

கரூரில் மின்சாரத்துறை தனியார் மயமாக்களுக்கு எதிராக சிஐடியு ஆர்ப்பாட்டம்.

Update: 2025-01-01 03:33 GMT
கரூரில் மின்சாரத்துறை தனியார் மயமாக்களுக்கு எதிராக சிஐடியு ஆர்ப்பாட்டம். மின்சாரத் துறையில் அதானிக்கு தாரை வார்க்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், இதற்கு ஆதரவாக செயல்படும் சண்டிகார், உத்தரபிரதேச மாநில பிஜேபி அரசுகள், மின்சார துறை தனியார் மயமாக்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று மாலை சிஐடியு சார்பில் மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் தனபால், கரூர் திட்ட தலைவர் சுப்பிரமணியன், திட்ட செயலாளர் நெடுமாறன், திட்ட பொருளாளர் ஈஸ்வரன் மற்றும் மாவட்ட செயலாளர் முருகேசன் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News