நள்ளிரவில் தள்ளுபடி விற்பனை அலைமோதிய மக்கள் கூட்டம்!
தூத்துக்குடியில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனத்தில் திடீரென நள்ளிரவில் வாங்கும் அனைத்து ஜவுளிகளுக்கும் 50 சதவீத தள்ளுபடி என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதியது
தமிழகம் முழுவதும் இயங்கி வரும் பிரபல ஜவுளி நிறுவனமான சென்னை சில்க்ஸ் ஜவுளி நிறுவனம தூத்துக்குடி வி வி சாலையில் உள்ளது. இந்த ஜவுளி நிறுவனத்தில் திடீரென புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் 50 சதவீத தள்ளுபடி விற்பனை என அறிவிக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் வாங்கும் அனைத்து ஜவுளிகளுக்கும் இரவு 10 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை 25% முதல் 50 சதவீத தள்ளுபடி விலை என்பதால் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் கூட்டம் அலை மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது..