பெரியதச்சூா் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை போலீசார் விசாரணை;

Update: 2024-12-29 15:55 GMT
கடலூா் மாவட்டம், கோண்டூா் பாலசுப்பிரமணிய நகரைச் சோ்ந்த கோவிந்தன் மகன் சசிதா் (21). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூா் அருகிலுள்ள மோழியனூரில் உள்ளது. இந்த நிலத்தில் சசிதரின் சொந்த கிராமத்தைச் சோ்ந்த சிவப்பிரகாசம் மகன் கோவிந்தன் (50)என்பவா் தங்கி, விவசாய வேலை பாா்த்து வந்தாா்.இந்த நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்பு, கோவிந்தனின் தாய் முத்தம்மாள் சென்னையில் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டாராம். இதனால், அவா் மனமுடைந்த நிலையில் காணப்பட்டாராம்.இந்த நிலையில், மோழியனூரில் தான் தங்கியிருந்த விவசாய நிலத்தில் இருந்த புளியமரத்தில், கோவிந்தன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து, பெரியதச்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Similar News