உடுமலையில் பாதுகாப்பு துறையில் சேர இலவச பயிற்சி முகாம்

50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு;

Update: 2024-12-30 08:49 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி நினைவு அறக்கட்டளையில் பாதுகாப்பு துறை பணியில் சேர்வதற்கான கருத்தரங்கு இன்று நடத்தப்பட்டது அறக்கட்டளையின் நிறுவனர் திரு கே ஆர் எஸ் செல்வராஜ் துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சென்னையில் டிபன்ஸ் சர்வீஸ் பிரிப்பரேட்டரி அகாடமி மற்றும் விஷன் டிபன்ஸ் இன்ஸ்டிட்யூட் தாளாளர் ஜெயமுருகன் துவக்கி வைத்தார் விழாவுக்கு வருகை தந்த அனைத்து மாணவ செல்வங்களுக்கும் பாதுகாப்புத் துறையில் சேர்வதற்கான தேவையான வழிகாட்டுதல் மற்றும் மாணவ மாணவிகள் அச்சம் இல்லாமல் தேர்வு எழுத புரிய அறிவுரைகள் இன்று வழங்கினார். மேலும் பாதுகாப்பு துறையில் சேர்ந்து பணியாற்றுவதற்கு ஆர்வமாக உள்ள மாணவ மாணவிகள் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இலவசமான வகையில் வகுப்புகள் நடைபெறும் என்று அறக்கட்டளையின் நிறுவனர் மாணவர்களுக்கு தெரிவித்தார் . உடுமலை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சார்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் 50க்கும் மேற்பட்டோர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

Similar News