ஜெயங்கொண்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம்
ஜெயங்கொண்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.;
அரியலூர், டிச.30 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம், ரத்த தான கழக மாநில குழு உறுப்பினர் ஹேமநந்தினி தலைமையில் நடைபெற்றது. ரத்ததான முகாமை ஜெயங்கொண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தொடங்கி வைத்தார். அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் சந்திரசேகர் தலைமையிலான ரத்த வங்கி சேகரிப்பாளர் சுபாஷ் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் சேகரிக்கப்பட்ட ரத்தங்களை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முகாமிற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில இணை செயலாளர் செல்வராஜ், மாவட்ட தலைவர் ஆர்.ரவீந்திரன் மாவட்ட செயலாளர் துரைஅருணன் எஸ்.எப்ஐ மாவட்ட செயலாளர் குணா, மாவட்ட செயற்குழு சரோஜினி ஆகியோர் முன்னிலை வகித்து ரத்ததானம் செய்தனர். .இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட துணை தலைவர் ஏ.அருணாச்சலம், குகன், ரமேஷ், மாரிமுத்து, கணேசன், வீரவேல், விக்னேஸ்வரன், பாலகிருஷ்ணன், குணசேகரன், பிரகதீஸ்வரன், விக்னேஷ், வீரபதி, நவீன்குமார், தினேஷ், கார்த்திக், ஜெர்ரிஆண்டனி, பூமிநாதன், விசுவாசவிக்னேஷ், ஹரிஹரன், நவீன், தினேஷ், சுரேந்தர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.முகாமில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் ஆர்.மணிவேல், எம் வெங்கடாசலம், மாதர் சங்க மாவட்ட தலைவர் பி.பத்மாவதி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினர்.