கோலியனுார் ஒன்றியம், கண்டமானடி கிராமத்தில், தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜய காந்த் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்ட தொழிற் சங்க செயலாளர் வழக்கறிஞர் மனோ அவர்களின் தலைமை தாங்கினார்.இதில், 300 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினர். கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேப்டன் கேடயம் மற்றும் மாணவர்களுக்கு நோட்டு,பேனா, பென்சில், ஸ்கேல், கணித பெட்டி உள்ளிட்ட கல்வி உபகரணங்களை, வழக்கறிஞர் மனோ வழங்கினார்.இதில், ஒன்றிய மாணவரணி செயலாளர் சிவா, மாவட்ட பிரதிநிதி அய்யனார், கிளை செயலாளர்கள் அருள், பிரபு, அய்யப்பன், வெற்றி மற்றும் ரகு, சுரேந்தர், சேகர், அரிராமன், கலியமூர்த்தி, சிவக்குமார், இலக்கியா மற்றும் பலர் பங்கேற்றனர்.