பெண்ணுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்யாத “திராவிட பேரிடர் மாடல்” - அண்ணாமலை சாடல்

ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத ஒரு அவல ஆட்சி தான் இந்த திராவிட Disaster Model,” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமரசித்துள்ளார்.

Update: 2024-12-30 17:58 GMT
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி என்று நிகழ்ச்சி ஒன்றில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். கல்லூரிக்குள் நுழைந்து அங்கு பயிலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவனை உங்கள் கட்சியில் இருந்து இன்று வரை நீக்காமல் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் போது, மேடையில் எப்படி இப்படி பேசுகிறீர்கள் முதல்வர் அவர்களே? ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி, அந்த பெண்ணுக்குக் கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத ஒரு அவல ஆட்சி தான் இந்த திராவிட Disaster Model” என்று அவர் கூறியுள்ளார்.

Similar News