அர்ஜுனா விருது அறிவித்ததற்கு பேட்மிட்டன் வீராங்கனை மனிஷா ராமதாஸ் நன்றி
அர்ஜுனா விருது அறிவித்ததற்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்திருப்பதற்கு பேட்மிட்டன் வீராங்கனை மனிஷா ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்
திருவள்ளூர் : அர்ஜுனா விருது அறிவித்ததற்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்திருப்பதற்கு பேட்மிட்டன் வீராங்கனை மனிஷா ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார் விளையாட்டுப் போட்டிக்கு தமிழக அரசு பல்வேறு உதவிகள் செய்து வருவதாகவும் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக பாரா ஒலிம்பிக் பாரிஸ் நடைபெற்ற போட்டிக்கு தமிழக அரசு 7 லட்சம் அளித்ததாகவும் அது பெரு உதவியாக இருந்ததாகவும் வெற்றி பெற்று நாடு திரும்பிய தங்களை முதல்வர் பாராட்டி 1 கோடி ஊக்கத்தொகை அளித்ததாகவும் விளையாட்டு தமிழகத்தில் விளையாட்டு துறை மற்ற மாநிலங்களில் உள்ள விளையாட்டு வீராங்கனைகள் கேட்கும் வகையில் இருப்பதாகவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அர்ஜுனா விருது ஒன்றிய அரசு அளித்திருப்பது மகிழ்ச்சியை அளித்திருப்பதாகவும் இந்த விருது அறிவித்துள்ள ஒன்றிய அரசுக்கும் தனக்கு ஊக்கமாக உள்ள தமிழக அரசுக்கும் தனது தாய் தந்தைக்கும் பயிற்சியாளருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாகவும் தனக்கு அர்ஜுனா விருது அறிவித்திருப்பது மேலும் வருகின்ற 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வதற்கு ஊக்கம் அளித்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்