ராசிபுரத்தில் 250-வது பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்..
ராசிபுரத்தில் 250-வது பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்..
ராசிபுரத்தில் 250-வது பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.. பல வருடங்களாக பேருந்து இல்லாத கிராமத்திற்கு பேருந்து வசதி கேட்டு கோரிக்கை வைத்து கிராம மக்கள், இலவச பேருந்து விடியல் பயண பேருந்து அனுப்பி வைப்பதாக மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் உறுதி அளித்தார்.. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட அரசபாளையம் பகுதியில் 250-வது ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் திறப்பு விழாவானது நடைபெற்றது.விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ்குமார் கலந்துகொண்டு 250-வது ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பால் விற்பனையை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் திமுகவின் சாதனைகளை முன்னிறுத்தி பொதுமக்களிடம் பேசினார்.அப்போது அரசபாளையம் பால் உற்பத்தி சங்கத் தலைவர் ரங்கசாமி மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜேஷ் குமாரிடம் தனியாக பால் விற்பனை கூடம் வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் தற்போது திறக்கப்பட்டுள்ள சங்கத்திலிருந்து தினமும் 500 லிட்டர் பால் உற்பத்தி வரும்போது புதிய கட்டிடத்தை கட்டி தருவதாக உறுப்பினர் ராஜேஷ்குமார் கூறினார் . மேலும் அரசபாளையம் கிராம மக்கள் பல வருடங்களாக பேருந்து வசதி இல்லாமல் இருப்பதாக தெரிவித்த நிலையில் ராஜேஷ்குமார் இலவச பேருந்து(விடியல் பயண பேருந்து)வசதி செய்து தருவதாக உறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் கே. பி.ஜெகநாதன், துணைத் தலைவர் சந்திரா சிவக்குமார், மற்றும் அரசு அதிகாரிகள் பால் உற்பத்தியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.