திமுக, பாமக, நாதக கட்சி நிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியம்
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் திமுக ஒன்றிய கவுன்சிலர் ஜோதி, இன்றைய தினம் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இனைந்தார். அதேபோல் அரியலூர் மாவட்டம், தா. பழூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீபுரந்தான் பாமக கிளை செயலாளரும், முன்னாள் ஒன்றிய இளைஞரணி தலைவருமான ஜி.ஐயப்பன், த. பொட்டக்கொல்லை பகுதியை சேர்ந்த பாமக நிர்வாகி பிரபாகரன், நாம் தமிழர் கட்சியின் ஜெயங்கொண்டம் தொகுதி செயலாளர் தமிழ்மாறன் ஆகியோர் இன்று சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். புதியதாக கழகத்தில் இணைந்தவர்களுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அதிமுக துண்டு அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது அரியலூர் மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொரடாவுமான தாமரை S. ராஜேந்திரன், மாவட்ட கழக அவைத்தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராமஜெயலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.