சேலத்தில் போலீசார் அனுமதியின்றி பாமக ஆர்பாட்டம்
50 க்கும் மேற்பட்டோர் கைது
சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் மாணவி பாதிக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்த இருந்த பசுமை தாயகத் தலைவர் சௌமியா அன்புமணியை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இ.ரா.அருள் தலைமையில் சேலம் கோட்டை மைதானத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போராட்டம் செய்தனர் செய்தனர். போலீசார் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்த பாமகவினர் 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்களை போலீசார் விடுவித்தனர்.