ஆண்டிமடத்தில் துணை முதல்வர் உதயநிதியின் பிறந்தநாள் மற்றும் திமுக சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்.

ஆண்டிமடத்தில் துணை முதல்வர் உதயநிதியின் பிறந்தநாள் மற்றும் திமுக சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-12-30 18:01 GMT
அரியலூர், டிச.30- ஜெயங்கொண்டம் அடுத்து ஆண்டிமடம் ஒன்றிய திமுக சார்பில்,விளந்தையில்,திமுக இளைஞரணி செயலாளர், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்,ஒன்றிய செயலாளர் ரெங்க.முருகன் தலைமையில், முன்னதாக திமுக முன்னோடி ஏவிஎம்.சாமிநாதன் வரவேற்று பேசினார். தலைமை கழக பேச்சாளர்கள் தமிழ் சாதிக், இளம் பேச்சாளர் சி.ஜெனனி ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க.கண்ணன் மற்றும் தலைமை கழக ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி மேலிட பார்வையாளர் கலா சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பானுமதிஇராஜேந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் கேடிஆர்.பத்மநாபன் மற்றும் மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள்,ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள்,உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் எஸ்.இளங்கோவன் நன்றி கூறினார்.

Similar News