கோவை: தடை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க வினர் கைது !

கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும் கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ஜுனன் தலைமையில் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-12-31 04:09 GMT
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பாலியல் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டி தமிழக அரசை கண்டித்து நேற்று அ.தி.மு.க சார்பில் தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும் கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ஜுனன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்த அவர்கள் யார் அந்த சார்? என்ற பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். காவல் துறையினர் அனுமதியை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர்களை காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது சிலர் திடீரென சாலையில் அமர்ந்து கண்டனம் முழக்கங்களை எழுப்பியதால் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.இதன் காரணமாக பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News