குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் இந்த ஆண்டு மார்கழிப் பெருந்திருவிழா நாளை 4-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இன்று 3-ம் தேதி மாலைஇடலாக்குடி பட்டாரியார் சமுதாயத்தினர் நெய்து கொண்டு வரும் கொடியினை மேள தாளங்கள் முழங்க ரத வீதியை சுற்றி கோவில் அலுவலகத்தில் ஒப்படைப்பார்கள். அதனைத் தொடர்ந்து நாளை காலை 6 மணி அளவில் மாணிக்கவாசகர் பூஜையும் தொடர்ந்து காலை 7.45 மணிக்கு மேல் கொடியேற்று நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஒன்பதாம் திருவிழாவான 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் இரவு 12 மணிக்கு தனது தாய் தந்தையரின் விழாவில் பங்கெடுத்துக் கொள்ள வந்த விநாயகர் சுப்ரமணிய சுவாமி தனது தாய் தந்தைகளை மூன்று முறை வலம் வந்து பிரிந்து செல்லும் சப்தா வர்ணக்காட்சி நடைபெறுகிறது. பத்தாம் திருவிழாவான 13ஆம் தேதி திங்கள் கிழமை காலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் மாலை 5 மணிக்கு நடராஜர் திரு விதி உலா வரும் நிகழ்ச்சியும் இரவு 9 மணிக்கு திரு ஆறாட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்