மகாராஜா கடை: பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய நபருக்கு காப்பு.
மகாராஜா கடை: பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய நபருக்கு காப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜா கடை போலீசார் மேல்பட்டி குகை மாரியம்மன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிக் கொண்டிருந்தனர். அவர்களை கையும் களமாக பிடித்த போது சிலர் அங்கிருந்து ஓடி விட்டனர். மேலும் அங்கிருந்த கிருஷ்ணகிரி பழையபேட்டை சேர்ந்த பிரபாகரன் (30) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 300 ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்து தப்பி ஓடிய கிருஷ்ணகிரி பழையபேட்டை மனோஜ், கருணாகரன், வடிவேலு என்பது தெரியவந்தது இதை அடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.