திமுக மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தர்மபுரி சட்டமன்ற தொகுதி திமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் மாநில தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் தருண் தலைமையில் நடந்தது
இன்று டிசம்பர் 05 தர்மபுரி கிழக்கு மாவட்டம் தர்மபுரி சட்டமன்ற தொகுதி மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியத்தில்,தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி EX.MLA தலைமையில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் தர்மபுரி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஆ.கா. தருண் அவர்களின் முன்னிலையில்,நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் AS சண்முகம் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 1.BLC நிர்வாகிகள் நியமனம் குறித்தும், 2. 2026 சட்டமன்றத் தேர்தல் ஆக்கப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்வில்,மாவட்ட கழக பொருளாளர் தங்கமணி,மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், முன்னாள் நகர் செயலாளர் மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் அன்பழகன், ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் ,துணை அமைப்பாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.