நெல்லையில் பருவநிலை மாற்றம் காரணமாக நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (ஜனவரி 5) நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தச்சநல்லூர் கிளை சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் கிளை தலைவர் தாழை உசேன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இந்த முகாமினை தொகுதி தலைவர் ஷேக் இஸ்மாயில் துவங்கி வைத்தார்.