ஜெயங்கொண்டம் அருகே கழிவுநீர் செல்வதில் தகராறு முன் விரோதம் அரிவாளால் வெட்டியவர் கைது

ஜெயங்கொண்டம் அருகே கழிவுநீர் செல்வதில் தகராறு முன் விரோதம் அரிவாளால் வெட்டியவர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2025-01-03 03:38 GMT
அரியலூர், ஜன.3 -  ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை காலனி தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ் மகன் பரமேஸ்வரன் 16 இவரது வீட்டிற்கும் அருகில் வசிக்கும் முருகேசன் மகன் பாஸ்கர் 48 என்பவர் வீட்டிற்கும் முன்பாக கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. இந்நிலையில் ஜனவரி 1 - ஆம் தேதி அன்று மாலை பாஸ்கர் பரமேஸ்வரனிடம் வீண் தகராறு செய்து உள்ளார்.அப்போது வாய் தகறாரு முத்தி ஆத்திரமடைந்த பாஸ்கர் தன் மறைத்து வைத்திருந்த அறிவாளால் பரமேஸ்வரனை கையில் கையில் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் பரமேஸ்வரன் 108  மூலம்  ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சூழ்ச்சிக்காக சேர்க்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து பாஸ்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News