கோவை: மக்கள் மனதில் இடம் பிடித்த திருவள்ளுவர் சிலை !

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை, பொதுமக்களை மிகவும் கவர்ந்துள்ளது.

Update: 2024-12-31 04:33 GMT
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை, பொதுமக்களை மிகவும் கவர்ந்துள்ளது. மனு நடைபெறும் தினங்களில், மனுக்கள் அளிக்க வருபவர்கள் திருவள்ளுவர் சிலையுடன் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் 25வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, தமிழக முதல்வரின் அறிவுரையின்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை, கோவை மக்களின் தமிழ்ப் பற்றுக்கு சான்றாகத் திகழ்கிறது.திருவள்ளுவர் சிலையுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருபவர்கள், தங்களது தமிழ்ப் பெருமையை வெளிப்படுத்துகின்றனர். இந்த சிலை, கோவை மாவட்ட மக்களின் வாழ்வில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

Similar News