திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் பரவலாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த மழையின் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறையில் மாணவர்கள் உள்ளதால் ஏராளமான பொதுமக்கள் குடும்பங்களுடன் நெல்லை மாநகரில் உள்ள தாமிரபரணி ஆற்றில் சங்கமித்து குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.