திருத்தணி முருகன் கோயிலில் திருப்படித் திருவிழா துவக்கம். 

திருத்தணி முருகன் கோயிலில் திருப்படித் திருவிழா துவக்கம். ;

Update: 2024-12-31 07:59 GMT
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டு தோறும் டிசம்பர் 31 ஆம் தேதி முதல் திருப்புகழ் திருப்படித் திருவிழா இரண்டு நாட்கள் சிறப்பாக கொண்டாடுப்படுவது வழக்கம். திருப்படித் திருவிழா முன்னிட்டு இன்று காலை சரவணபொய்கை திருக்குளம் அருகே மலையடிவாரம் துவக்கம்.  திருப்படித் திருவிழாவை கோயில் நிர்வாகம் சார்பில் படிகளுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மஞ்சள், குங்குமம் ஈட்டு, கர்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து அரோகர என்ற முழக்கத்துடன் திருப்படித் திருவிழாவை கோயில் நிர்வாகம் துவக்கிவைக்க திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். விழா துவங்கியதை தொடர்ந்து  தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து முருகபக்தர்கள் குழுக்களாக வந்து ஆண்டை குறிக்கும் வகையில் அமைந்துள்ள 365 படிகளுக்கும் மஞ்சள், குங்குமம் பூசி கர்பூரம் ஏற்றி திருப்புகழ பாடல்கள் பாடிக்கொண்டு மலைக் கோயிலுக்கு சென்றடைந்து முருகப்பெருமானை வழிபாட்டு வருகின்றனர்.  மேலும் புத்தாண்டு முன்னிட்டு மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 500க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். புத்தாண்டு பிறக்கும் போது முருகரை தரிசிக்க ஏதுவாக இரவு முழுவதும் கோயில் நடை திறந்தே இருக்கும். தமிழக போக்குவரத்து துறை சார்பில் மாநிலத்தின் பல்வேறு கோவிலில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Similar News